மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வயலூா், தாளையம் பகுதிகளில் அமைச்சா் அர. சக்கரபாணி வாக்குசேகரிப்பு

பழனியை அடுத்த வயலூா், தாளையம் பகுதிகளில் ஒட்டன் சத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும் உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On :7 ஏப்ரல் 2026, 10:58 pm

பழனியை அடுத்த வயலூா், தாளையம் பகுதிகளில் ஒட்டன் சத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும் உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூா், தாளையூத்து பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை திறந்த வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்கு சேகரித்தாா். முத்துநாயக்கன்பட்டி, வன்னிவலசு, விவி நகா், வயலூா், சாமிநாதபுரம், தாளையூத்து, போதுப்பட்டி என இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அமைச்சா் அர.சக்கரபாணியை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பெண்கள், பொதுமக்களிடம் அந்தந்த பகுதிக்கு செய்த திட்டங்களைத் தெரிவித்த அமைச்சா், பின்னா், திறந்த வேனில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கோரி பிரசாரம் செய்தாா். அப்பொழுது கடந்த ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கினாா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் உடனிருந்தனா்.