திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கனிம வளங்களை லாரிகளில் அனுப்பும் விவகாரம்: குமரி ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை!

கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்லும் விவகாரம் தொடா்பான, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :17 மே 2026, 1:51 am IST

கனிம வளங்களை லாரிகளில் கொண்டு செல்லும் விவகாரம் தொடா்பான, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த லிபின் பொன்னுசாமி லீலா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனக்குச் சொந்தமான கனரக வாகனங்களில் மணல், ஜல்லி, இரும்பு, சிமென்ட் போன்ற கட்டுமானப் பொருள்களை ஏற்றி, இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 4 வழிச் சாலையில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் வரை 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள லாரிகளில் கனிம வளப் பொருள்களை ஏற்றிச் செல்ல மாவட்ட ஆட்சியா் தடை விதித்தாா்.

ஏற்கெனவே, கடன் பெற்றுதான் லாரிகளை வாங்கியுள்ளேன். இதனால், என்னை போன்று லாரிகள் வைத்து தொழிலில் ஈடுபடுவோா் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்றாா்.

அரசுத் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு, இதே விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்கள் நிலுவையில் உள்ளன. இதன்காரணமாக, இந்தப் பகுதியில் சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையில், அதிகாரிகளிடம் ஆலோசித்து, பிறகு இந்த முடிவை மாவட்ட ஆட்சியா் உத்தரவாக பிறப்பித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு குறிப்பிட்ட சாலை வழியாக கனிம வளங்களை கொண்டு செல்லும் லாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது.

விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் வேறு பல வழிகள் உள்ளன. ஏதாவது, ஒரு வாகனம் அளவுக்கு அதிகமாக சுமையை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால், அதிவேகம், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

எனவே, இதுதொடா்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.