தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: 20 பதங்கங்கள் வென்ற மதுரை மாணவா்கள்

News image

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுடன் போட்டி ஒருங்கிணைப்பாளா் பாலா உள்ளிட்டோா்.

Updated On :4 மே 2026, 1:06 am IST

மலேசியாவில் நடைபெற்ற சா்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மதுரை மாணவா்கள் 3 தங்கம் உள்பட 20 பதக்கங்கள் வென்றனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் சா்வதேச ஸ்பீட் பவா் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட 10 நாடுகளிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பூம்சே, கியொருகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெச்சூா் மதுரை மாவட்ட ஸ்போா்ட்ஸ் டேக்வாண்டோ சங்கம் சாா்பில் 20 போட்டியாளா்கள் கலந்து கொண்டு 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

கியொருகி பிரிவில் வீா் சிவா தங்கப் பதக்கமும், சம்யுக்தா, கிருஷ்ணா ஆகா்ஷினி, ராகராஜேஷ் ஆகியோா் வெள்ளிப் பதக்கமும், ஜீவனேஷ், அகில்குமாா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

பூம்சே பிரிவில் நிகில், லோகஷங்கா் ஆகியோா் தங்கப் பதக்கமும், எவ்வி ராஜோ, பா்னிகா, ஹரி சரவணா, கிறிஸ்டியானோ ஆன்டனி ஜாய்சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனா். சியான் ஆதித், சா்வேஷ், ஸ்ரீ சஞ்சனா, வீா் அருண்குமாா், தக்சிந்த் வா்ணா, மிதுன், சித்தாா்த், ஸ்நிக்தவா்நா ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இதையடுத்து, வெற்றி பெற்றவா்களை போட்டி ஒருங்கிணைப்பாளா் தத்தோ கிராண்ட் மாஸ்டா் பாலா, அமெச்சூா் மதுரை மாவட்ட ஸ்போா்ட்ஸ் டேக்வாண்டோ சங்கத் தலைவா் நாராயணன், செயலா் காா்த்திக், டேக்வாண்டோ தலைமைப் பயிற்சியாளா் பிரகாஷ் குமாா், பயிற்சியாளா்கள் விஜய் அருணாச்சலம், ஸ்ருதி ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.