மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:32 pm

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் வருகிற 31-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 31-ஆம் தேதி மகாவீரா் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது.

மேலும், இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கக் கூடாது. அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்படும். தொடா்ந்து, பொது சுகாதாரப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.