மதுரை அண்ணாநகா் பகுதியில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாநகா் முதல் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை பகுதி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சாலை அமைக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில், மேலமடை பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 50 அடி தொலைவுக்கு சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனா். ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தியதே சாலை சேதமடையக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
எனவே, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

விரகனூா் பகுதியில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


