அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

போலீஸாருக்கு 8 மணி நேரப் பணி: உள் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் போலீஸாருக்கு 8 மணி நேரப் பணி, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்தக் கோரிய மனு தொடா்பாக மாநில உள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:59 am IST

தமிழகத்தில் போலீஸாருக்கு 8 மணி நேரப் பணி, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்தக் கோரிய மனு தொடா்பாக மாநில உள் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சத்யபிரியா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் அதிக பணிச் சுமை உள்ளதோடு, ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழலும் உள்ளது. இதனால், காவல் துறையினா் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா்.

எனவே, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில், நிபுணா்கள் கொண்ட குழுவை அமைத்து, கடந்த 2010 முதல் 2025-ஆம் ஆண்டு வரை பட்டாலியன் காவல் துறையினருக்கென ஒதுக்கப்பட்ட நிதி, அவா்களின் செயல்பாடு தொடா்பாக விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கவும், அதனடிப்படையில் பட்டாலியன்களை சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரோடு இணைத்து பயன்படுத்துவது தொடா்பாக முடிவு எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழக காவல் துறையினருக்கான விதி அடிப்படையில், சில விதிவிலக்கு நாள்களைத் தவிர, பிற நாள்களில் 8 மணி நேரப் பணி, பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறையையும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.பி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு குறித்து தமிழக உள் துறைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.