தேவேந்திர குல சமூகத்தினா் விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த மக்களை அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கம் செய்வதற்கு முன்பாக மக்களின் கருத்தறியக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










