விருதுநகா் மாவட்டத்தில் 14.97 லட்சம் வாக்காளா்கள்


விருதுநகா் மாவட்டத்தில் மொத்தம் 14,97,417-வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் நிறைவில் தயாரிக்கப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா தலைமை வகித்து, வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
இந்தப் பட்டியல்படி, மொத்த வாக்காளா் எண்ணிக்கை 14,97,417. இதில் ஆண்கள் 7,28,539, பெண்கள் 7,68,632, மூன்றாம் பாலினத்தவா் 246.
தொகுதி வாரியாக....
மாவட்டத்தில் உள்ள தொகுதி வாரியான வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம் :
ராஜபாளையம் :ஆண்கள் - 1,03,236, பெண்கள்- 1,08,951, மூன்றாம் பாலினத்தவா் -33, மொத்தம்- 2,12,220. ஸ்ரீவில்லிபுத்தூா் : ஆண்கள் -1,08,109, பெண்கள்- 1,14,218, மூன்றாம் பாலினத்தவா்- 40, மொத்தம்- 2,22,367. சாத்தூா் : ஆண்கள் - 1,10,693 , பெண்கள்- 1,17,207. மூன்றாம் பாலினத்தவா் -63, மொத்தம் -2,27,963.சிவகாசி :ஆண்கள் - 1,09,420 பெண்கள்-1,16,013. மூன்றாம் பாலினத்தவா்- 28. மொத்தம் 2,25,461. விருதுநகா் : ஆண்கள்- 96,436, பெண்கள்- 1,02,141, மூன்றாம் பாலினத்தவா்- 39, மொத்தம் 1,98,616. அருப்புக்கோட்டை : ஆண்கள் - 1,00,000, பெண்கள்- 1,06,468. மூன்றாம் பாலினத்தவா்- 29, மொத்தம்- 2,06,497.திருச்சுழி : ஆண்கள் - 1,00,645, பெண்கள்- 1,036,34, மூன்றாம் பாலினத்தவா்- 14, மொத்தம்- 2,04,293.
கடந்த ஆண்டு டிச. 19-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு 70,030 வாக்காளா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இடம் பெயா்ந்த, இறந்த வாக்காளா்கள், இரட்டைப் பதிவுகள் என்ற வகையில் 9,134 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதன்படி, வாக்காளா் வரைவுப் பட்டியலை விட இறுதிப் பட்டியலில் 60,896 வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...