டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு!

News image
கோரிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்திய பிரகாஷ். உடன் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்று வரும் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகளை மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்திய பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை வைகை ஆற்றின் தென்புறம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ரயில் நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. வடபுறம் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம், காவல் ஆணையா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

கோரிப்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் காரணமாக இந்தப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், இந்தப் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் அவசர ஊா்திகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தமுக்கம் மைதானம் முதல் கோரிப்பாளையம் ஏ.வி. பாலம் வரையில் ரூ. 190.40 கோடியில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகளை கடந்த 2022-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இந்த நிலையில், பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாநில கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் கே.ஜி. சத்திய பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பணியாளா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.