சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேனியில் அரசு மோட்டார் வாகன பராமரிப்புப் பணிமனை அமைக்கப்படுமா?

தேனி, ஜூன் 19:  தேனியில் அரசு வாகனங்களைப் பராமரிப்பதற்கு மோட்டார் வாகனப் பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும் என்று அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ÷தேனி

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:54 pm

கோ.ராஜன்

தேனி, ஜூன் 19:  தேனியில் அரசு வாகனங்களைப் பராமரிப்பதற்கு மோட்டார் வாகனப் பராமரிப்புப் பணிமனை அமைக்க வேண்டும் என்று அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

÷தேனியில் அரசின் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமாக 300-க்கும் மேற்பட்ட 4 சக்கர மற்றும் 2 சக்கர மோட்டார் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களைப் பராமரிப்பதற்கு மதுரையில் உள்ள அரசு மோட்டார் வாகனப் பராமரிப்புப் பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள், மாதம் 2 முறை தேனிக்கு வந்து செல்கின்றனர்.

÷மதுரையில் இருந்து மோட்டார் பராமரிப்புக்கான தளவாட பொருள்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றி வருவதற்கு தேனியில் இருந்து காவல் துறை சார்பில் வாகனம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால், ஒரு நாளில் 15-க்கும் குறைவான வாகனங்களை மட்டுமே பழுதுபார்க்க முடிகிறது.

÷ஆயில் சர்வீஸ் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த வாகனங்கள், டயர் மற்றும் பேட்டரி மாற்றம்செய்ய வேண்டிய வாகனங்கள் ஆகியவற்றை தேனியில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை வாகனப் பராமரிப்புப் பணிமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

÷இதுகுறித்து அரசு வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:÷தேனியில் இருந்து மதுரைக்கு பராமரிப்புப் பணிக்கு அரசு வாகனங்களைக் கொண்டு செல்வதால் கூடுதல் டீசல் செலவு மற்றும் கால விரயம் ஏற்படுகிறது. காவல் துறை சார்பு-ஆய்வாளர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை பராமரிப்புப் பணிக்கு மதுரைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் பணி பாதிக்கிறது. மதுரை பணிமனையில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், நாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

÷இதனால், அவசர தேவைக்கு உள்ளூரில் உள்ள தனியார் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் செலவு, அலைச்சல், காலவிரயம் ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது போல, தேனியில் அரசு மோட்டார் வாகனப் பராமரிப்புப் பணிமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.