மதுரை, மே 22:மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான (2010-2011) பாடப் புத்தகங்கள் இதுவரை சுமார் 52 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பாடநூல்களை இந்தாண்டு ஜூன் 1-ம் தேதிக்கு முன்பாகவே கிடைக்கச் செய்யும் வகையில், அஞ்சல் துறை மூலம் அந்தந்தப் பள்ளிகளுக்கு கொண்டுசெல்ல பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது.
இதற்காக தமிழகத்தில் கல்வி மண்டலம் வாரியாக அஞ்சல்துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் உள்ளடங்கிய ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே மாநிலத்தில் உள்ள முக்கிய மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கிடங்குகளில்இருந்து பாடநூல்களைக் கொண்டுசெல்லும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அஞ்சல்துறையின் வாகனங்கள் மூலம் பாடநூல்கள் பகுதி வாரியாக அந்தந்தப் பள்ளிகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன.
கடந்த ஒன்றரை மாதமாக இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 90 சதவீதப் பாடநூல்கள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையின்கீழ் வரும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 135.54 டன்கள் எடையுள்ள 6 லட்சத்து 85 ஆயிரத்து 209 பாடநூல்களும், மதுரை கல்வி மாவட்டத்தில் சுமார் 204.7 டன்கள் எடையுள்ள 6 லட்சத்து 16 ஆயிரத்து 500 பாடநூல்களும், மேலூர் கல்வி மாவட்டத்தில் 119.63 டன்கள் எடையுள்ள 3 லட்சத்து 55,928 பாடநூல்களும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 86.97 டன் எடையுள்ள 2 லட்சத்து 57 ஆயிரத்து 61 பாடநூல்களும், மதுரை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சரகத்தில் 23.94 டன் கொண்ட 1 லட்சத்து 31 ஆயிரத்து 468 பாடநூல்களும் என மொத்தம் சுமார் 20 லட்சத்து 36 ஆயிரத்து 500 பாடநூல்கள் விநியோக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, தேனி மாவட்டத்தில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மேற்பார்வையின்கீழ் வரும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 74.66 டன்கள் எடையுள்ள 3 லட்சத்து 84 ஆயிரத்து 506 பாடநூல்களும், உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் சுமார் 95.39 டன்கள் எடையுள்ள 2 லட்சத்து 80 ஆயிரத்து 311 பாடநூல்களும், பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 96.90 டன்கள் எடையுள்ள 2 லட்சத்து 85 ஆயிரத்து 223 பாடநூல்களும், தேனி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் சரகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் 6.76 டன்கள் கொண்ட 37 ஆயிரத்து 362 பாடநூல்களும் என மொத்தம் சுமார் 9 லட்சத்து 87 ஆயிரத்து 402 பாட நூல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாடநூல் நிறுவன கிடங்கில் இருந்து இதுவரை சுமார் 21.70 லட்சம் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதன் மண்டல அலுவலர் அய்யாத்துரை தெரிவித்தார்.
1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை இந்தக் கல்வியாண்டு (2010-2011) முதல் அமல்படுத்தப்பட உள்ளதால், அதற்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு அந்தந்தப் பகுதி மண்டல பாட நூல் நிறுவன குடோன்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இணை இயக்குநர் ராம. பாண்டுரெங்கன் சனிக்கிழமை மதுரையில் சிவகங்கை, மதுரை வருவாய் மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர்களிடம் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் நாள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளித் துணை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், மதுரை குடோனுக்குப் சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்கள் வந்துவிட்டன.
வரும் திங்கள்கிழமை (மே 24) முதல் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கான சமச்சீர் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஓரிரு நாளில் இப்பணி முடிக்கப்படும் என்றார்.
இதேபோன்று, அனைத்து மாவட்டங்களிலும் வரும் திங்கள்கிழமை முதல் சமச்சீர் கல்விப் பாடப்புத்தங்கள் வழங்கப்படலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

