மதுரை, மார்ச் 30: லாரிகளில் மூடப்படாமல் ஏற்றிச் செல்லப்படும் மணல், குப்பை ஆகியவற்றின் தூசியால் பொதுமக்களிடையே கண் கோளாறு அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டத்தில் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்களுக்காக சரக்கு லாரிகள், அரைபாடி லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மணல், செங்கல், ஜல்லி உள்ளிட்டவை எடுத்துச் செல்லப்படுகின்றன.
திருப்புவனம், ராமநாதபுரம் பகுதியில் இருந்து விரகனூர் வழியாக மதுரைக்கு அதிக
அளவில் அரைபாடி மணல் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. குருவித்துறை }மேலக்கால்} மதுரை வழித்தடத்தில் சில இடங்களிலும் மணல் லாரிகள் இயக்கப்படுகின்றன.
இந் நிலையில், மணல், செங்கல், ஜல்லி ஆகியவற்றை தார்ப்பாய் கொண்டு மூடாமல் ஏற்றிக்கொண்டு அரைப்பாடி லாரிகள் பலவும் அசுர வேகத்தில் செல்வதால், அவற்றில் இருந்து பறந்து வரும் தூசி பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்ணில்பட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்களில் சில நேரம் மேல்பகுதியில் மூடப்படாமல் எடுத்துச் செல்லப்படுவதாலும் காற்றில் பறக்கும் தூசி கண்ணில் படுவதாலும் பலருக்கு அலர்ஜி, தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எம்.ஜெ.பிரபாகரன் கூறியதாவது:
மணலை போதிய பாதுகாப்பின்றி மூடாமல் அரைபாடி லாரிகளில் கொண்டு செல்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மதுரை மாநகருக்குள் பகல் நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு லாரிகள் வர போலீஸôர் தடை விதித்துள்ளனர். எனினும், போலீஸôரின் கண்களிலேயே "மண்ணை' தூவிவிட்டு அரைபாடி லாரிகள் நுழைந்துவிடுகின்றன.
மணலை இறக்கிவிடும்போது முழுமையாக அகற்றாமல் விட்டுவிடுவதாலும் லாரிகள் திரும்பிச் செல்லும்போது அதில் இருந்து பறக்கும் மணல் தூசியானது பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் அப்பிவிடுகிறது. இதனால், வாகனத்தை இயக்க முடியாமல் நிலைதடுமாறி விபத்தில் சிக்க நேரிடுகிறது.
இதைத் தவிர்க்க மணலைக் கொட்டிய பிறகு நீர்விட்டு முழுவதும் சுத்தம் செய்வது அவசியமாகும். தார்ப்பாய் இல்லாமல் மணல் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கருவிழி நிபுணர் டாக்டர் அருண்குமார் கூறியது:
அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தினசரி வரும் நோயாளிகளில் 15 பேர் வரை, கண்ணில் தூசி உள்ளிட்ட நுண்ணிய பொருள்களால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பெரும்பாலும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும்தான் உள்ளனர்.
இதுபோன்ற சூழலில், தூசி விழுந்ததும் தூய நீரால் கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.
தாய்ப்பால், கோழி ரத்தம், விளக்கெண்ணெய், நாக்கு கொண்டு எடுப்பது உள்ளிட்ட நாட்டு வைத்திய முறைகளில் ஈடுபடக்கூடாது. கண்களை அழுத்தியும் தேய்க்கக் கூடாது.
வாகனங்களை ஓட்டும்போது "சன் கிளாஸ்'களைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
கடும் நடவடிக்கை: இதுகுறித்து மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஜெ.ராஜேந்திரனிடம் கேட்டபோது, ""நகருக்குள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டுமே லாரிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மணல் ஏற்றி வரும் அரைபாடி லாரிகள் தார்பாலின் கொண்டு மூடித்தான் வர வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். சாலைவிதி மீறும் வாகனங்கள் மீது சராசரியாக மாதந்தோறும் 500 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
மதுரை நகர்ப் பகுதிக்குள் வரும் லாரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், மணல் லாரி ஓட்டுநர்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும்'' என்றார்.
மதுரை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ரவிராஜன் கூறியதாவது:
அரைபாடி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு மணல் கொண்டு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து நோட்டீஸ் வழங்கி அறிவுறுத்தி உள்ளோம்.
லாரி கொள்திறனுக்கு மேல் மணல் கொண்டு செல்லக்கூடாது, சிலைமான் முதல் ரிங் ரோடு சந்திப்பு வரை சாலையோரங்களில் மணல் லாரிகளை நிறுத்தக்கூடாது,
தார்பாலின் எடுக்காமல் மார்க்கெட்டுக்கு மணல் கொண்டு வரக்கூடாது என்று லாரி உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
ஒரு சில லாரிகள் விதிமீறிச் செல்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ}விடம் நாங்களே கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

