தேனியில் தற்போது உள்ள பஸ் நிலையம், வாரச் சந்தை வளாகம் ஆகிய இடங்கள் ஆண்டுக் குத்தகை அடிப்படையில் பெற்றுதான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடம் இல்லாத நிலையில், தமிழ்நாடு வனத்துறை சட்டம் 1882 மற்றும் தமிழ்நாடு வன விலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ஆகியவற்றிற்கு உள்பட்டு, வனத்துறையிடம் நிலம் பெறுவதற்கு ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், திட்டத்தைச் செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர். தேனி நகராட்சி நிர்வாகம், புதிய பஸ்நிலையம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தாமல், ஒருமித்தக் கருத்துடன் செயல்பட்டு நகரில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், பஸ் நிலையத்தில் நிலவிவரும் இடநெரிசல், எதிர்காலத் தேவை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, புதிய பஸ்நிலையம் தொடங்குவதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.