சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தேனி டி.எஸ்.பி. அலுவலகம் இடம் மாற்றப்படுமா?

தேனி, ஜூலை 25: தேனியில் பஸ் போக்குவரத்து வசதி இல்லாத சாலையில், குடியிருப்புப்  பகுதிகளுக்கு நடுவில், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் காவல்துறை துணைக்  கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகத்தை, பொதும

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:51 pm

கோ.ராஜன்

தேனி, ஜூலை 25: தேனியில் பஸ் போக்குவரத்து வசதி இல்லாத சாலையில், குடியிருப்புப்  பகுதிகளுக்கு நடுவில், வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் காவல்துறை துணைக்  கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகத்தை, பொதுமக்கள் அணுகுவதற்கு ஏதுவாக இடமாற்றம் செய்ய, மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 தேனி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்,  தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள காவல்நிலையங்களும், தேனி போக்குவரத்துக் காவல்நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவையும் இயங்கி வருகின்றன.

 தேனியில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், தற்போது என்.ஆர்.டி. நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வாடகைக் கட்டத்தில், குறுகலான  மேல் மாடியில் செயல்பட்டு வருகிறது.

 பிரதானச் சாலையில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரத்தில் உள்ள இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு, பஸ் போக்குவரத்து வசதி இல்லை. எளிதில் அடையாளம் காணமுடியாத வகையில், வீடுகளுக்கு மத்தியில் உள்ள துணைக் காண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் செல்வதற்கான வழிகாட்டிப் பலகைகள் உரிய இடங்களில் வைக்கப்படவில்லை.

 இதனால் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகள் தொடர்பாக மேல் முறையீடு செய்வதற்கும், வழக்கு விசாரணை, திருவிழா அனுமதி பெறவும், துணைக் கண்காணிப்பாளரிடம் நேரடியாகப் புகார் அளிப்பதற்கும் வரும் பொதுமக்கள் பெரிதும்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 பல ஆண்டுகளாக போதிய இட வசதியில்லாத வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் இந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்யவும், துணைக்  கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அரசு சார்பில் புதிய கட்டடம் கட்டவும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 மேலும், பெரியகுளம் பிரதானச் சாலையில், அரசு இடத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட தேனி காவல்நிலையக் கட்டடம், எவ்வித சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல், இடவசதி இன்றி செயல்பட்டு வருகிறது. காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஒரு சிறிய அறையில் போக்குவரத்துக் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. வழக்குகளை விசாரிக்கவும், வாகனங்களை நிறுத்திவைக்கவும் போதிய இடமின்றி போலீஸôர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

 பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பாக, தேனி துணைக்  கண்காணிப்பாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யவும், தேனி காவல்நிலையம் மற்றும் போக்குவரத்து காவல்நிலையக் கட்டடத்தை சீரமைத்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துடன் கூடிய  ஒருங்கிணைந்த காவல் நிலைய வளாகம் அமைப்பதற்கும் மாவட்டக் காவல்துறை நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.