சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பயணம் விபத்தில் தலைக்காயமடைந்து 3 ஆண்டுகளில் 87 பேர் சாவு

மதுரை, ஜன.19: மதுரையில் கடந்த 3 ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்று விபத்தில் சிக்கி 87 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 211 பேர் தலைக்காயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் மற்றும்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:27 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன.19: மதுரையில் கடந்த 3 ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்று விபத்தில் சிக்கி 87 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 211 பேர் தலைக்காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்கள் மற்றும் தலைக் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவது கட்டாயம் என்று 2007}ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல்தான் சென்று வருகின்றனர். போலீஸôரும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோரை கட்டாயப்படுத்துவதில்லை.

ஆனால், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிப்பதாக ஆவணங்களில் மட்டும் குறிப்பிட்டுப் பணமும் கணக்குக் காட்டப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மதுரையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 300}க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தலையில் மட்டும் காயமடைந்து இறந்தவர்களில் 2007}ல் 32 பேரும், 2008}ல் 30 பேரும், 2009}ல் 25 பேரும் அடங்குவர்.

ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கியவர்களில் 2007}ல் 85 பேரும், 2008}ல் 65 பேரும் காயடைந்துள்ளனர்.

மதுரை நகரில் 2009}ல் மட்டும் 555 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 61 பேர் தலையில் மட்டும் காயமடைந்துள்ளனர்.

அபராதம் வசூல்: ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கியவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், மதுரையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 3 ஆண்டுகளில் போக்குவரத்துப் போலீஸôர் 83,916 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

அதில் 2007}ல் 34047 வழக்குகளும், 2008}ல் 31464 வழக்குகளும், 2009}ல் 18405 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதன் அடிப்படையில் 3 ஆண்டுகளில் ஹெல்மெட் அபராதமாக ரூ.83 லட்சத்து 91 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதில் 2007}ல் ரூ.3,04,700, 2008}ல் ரூ.31,46,400, 2009}ல் 18,40,500 என அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கி அதைச் செயல்படுத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதைச் செயல்படுத்த போலீஸôரும் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து மக்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட்டுகளை வாங்கினர்.

ஆனால், ஹெல்மெட் விவகாரம் அரசியலாக்கப்பட்டதால் மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதாக வந்த தகவலையடுத்து ஆட்சியாளர்கள் ஹெல்மெட் அணிய யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம் என மறைமுகமாகக் கூறினர்.

இதையடுத்து மதுரையில் போலீஸôரும் ஹெல்மெட் அணியாதவர்களைப் பிடித்து நேரடியாக அபராதம் வசூலிப்பதில்லை.

வாகன ஓட்டிகளும் ஹெட்மெட் அணிவதில் ஆர்வம் காட்டவில்லை.

கமிஷனர் பேட்டி: இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பி.பாலசுப்பிரமணியனிடம் கேட்டபோது, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் வலியுறுத்திட விழிப்புணர்வுப் பேரணிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.