அதன்படி தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படும் மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைதுறை, குடல், ஆசனநோய் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைத் துறை, சிறுநீரகவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளும் இத்துறைகளுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான 50 படுக்கை வசதிகளும் அங்கு அமைய உள்ளதாகவும், ஒவ்வோரு படுக்கையும் தலா ரூ. 30 லட்சத்தில் அமையும் எனவும் கூறப்பட்டது. அரசு மருத்துவமனையின் விரிவாக்கமாக 25 ஏக்கரில் அமைய உள்ளதாக முன்பு கூறப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தற்போது 5 ஏக்கராக சுருங்கிவிட்டது. இது தொடர்பாக திட்டக் கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.