பணத்துக்காக அதிகரிக்கும் ஆள்கடத்தல்!
மதுரை, பிப். 8: தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணத்துக்காக ஆள்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆள்கடத்தல் புகார்


மதுரை, பிப். 8: தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணத்துக்காக ஆள்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆள்கடத்தல் புகார்களை பெரும்பாலும் "காணவில்லை' என்ற அடிப்படையிலே போலீஸôர் வழக்குப் பதிவு செய்வதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2004 }ல் 878 கடத்தல் வழக்குகளும் 2006 }ல் 923 கடத்தல் வழக்குகளும், 2007 }ல் 1283 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இது கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது என்பதே போலீஸ் அதிகாரிகளின் கவலையாகும்.
மதுரையில் கடந்த ஆண்டு, மாநகராட்சி அதிகாரி மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவங்களில் மட்டுமே கடத்தல் என போலீஸôர் நேரடியாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுரை புறநகரில் கடந்த 2007 முதல் கடந்த ஜனவரி (2010) வரையில் 158 பேரைக் காணவில்லை என போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 28 பெண்களும் அடங்குவர்.
இதுவரை 110 வழக்குகளிலேயே துப்பு துலங்கியுள்ளது.
அதிலும் பலர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காதலித்து திருமணம் செய்தவர்கள். ஆனால், கண்டறியப்படாத 47 வழக்குகளில் 15 வழக்குகள் பணத்துக்காக ஆள்களை கடத்தியதாக இருக்கலாம் என்பது போலீஸ் அதிகாரிகளின் கருத்தாகும்.
மதுரை நகரில் கடந்த 2008 முதல் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி 9 }ம் தேதி வரையில் 85 பேரை காணவில்லை என புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை நகரில் கடந்த ஒருவாரத்தில் தபால்துறை அதிகாரி மற்றும் தனியார் நிறுவன அலுவலர் என 2 பேர் பணத்துக்காக கடத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை காணவில்லை என்றே போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நகரில் காணாமல் போன வழக்குகளில் இதுவரை 55 வழக்குகளிலேயே ஆள்கள் கண்டறியப்பட்டுள்ளனர். துப்புத்துலங்காத 30 வழக்குகளின் விசாரணையில் பணத்துக்காகவே பலர் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் 600}க்கும் மேற்பட்டவர்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் ரௌடிகள் என போலீஸôர் கணக்கெடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவர்கள் 9 குழுக்களாகச் செயல்பட்டு கடத்திச் செல்வோம் என மிரட்டி பலரிடம் பணம் வசூலித்திருப்பதும், பணத்துக்காக ஆள்களைக் கடத்துவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அண்மையில் வழிப்பறி வழக்குகள் தொடர்பாக சிலரைப் பிடித்து போலீஸôர் விசாரித்தபோதுதான் ஆள்கடத்தலும், பணம் பறிப்புச் சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இக்கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து மதுரையில் டாக்டர்கள், தொழிலதிபர்கள் பலர் மாதந்தோறும் கப்பம் கட்டி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
கும்பலுக்கு பயந்து கப்பம் கட்டிவருவோரது பட்டியலையும் போலீஸôர் தற்போது சேகரித்து உள்ளனர். மேலும், கடத்தல் கும்பலினரை கடுமையாகத் தண்டிக்க அரசியல் குறுக்கீடு தடையாக இருப்பதாகவும் போலீஸôர் ஆதங்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, இதுபோன்ற புகார்கள் வந்தால் தீவிரமாக விசாரித்து உரியநடவடிக்கை எடுக்கப்படுகிறது. புகார் தருவோர் "கடத்தல்' எனக் குறிப்பிட்டிருந்தால் அப்படியே வழக்குப்பதிவு செய்ய போலீஸôர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...