சாலை விபத்துகளால் அதிகரித்துவரும் உயிரிழப்பு
தேனி, டிச. 5: தேனி மாவட்டத்தில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாவ


தேனி, டிச. 5: தேனி மாவட்டத்தில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்டத்தில் 2010 ஜனவரி முதல் இதுவரை 2005 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 277 பேர் உயிரிழந்துள்ளனர். 1900-க்கும் மேற்பட்டோருக்கு உடல் ஊனம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளான திண்டுக்கல், மதுரை, குமுளி நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதிக வேகம், போக்குவரத்து விதிமுறை மீறல்கள், போதையில் வாகனம் ஓட்டுவது ஆகியவையே பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்.
விதிமுறை மீறலால் ஏற்பட்ட விபரீதம்: கடந்த பிப்ரவரி 10-ம் தேதி வைகை அணை சாலையில் ஆள்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 4-ம் தேதி பெரியகுளம் அருகே பஸ், கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஜூன் 22-ம் தேதி கம்பம் - கூடலூர் சாலையில் தனியார் பஸ் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 19-ம் தேதி உத்தமபாளையம் - சின்னமனூர் சாலையில் தோட்டத் தொழிலாளர்கள் சென்ற ஜீப், பஸ் மீது மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி (புதன்கிழமை) ஆண்டிபட்டி அருகே தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் மட்டுமின்றி, சாலை அமைப்புகளும் பல்வேறு இடங்களில் விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளன. தற்போது நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ள போதும், தார்ச் சாலையை ஓட்டியுள்ள மண் சாலைகள் அரிப்பு ஏற்படாத வகையில் முறையாகச் சீரமைக்கப்படவில்லை, நெடுஞ்சாலையின் சந்திப்புச் சாலைகள் குறுகலாகவும், வாகன ஓட்டிகளின் பார்வைக்குத் தெரியாத வகையிலும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிக வேகம், சரக்கு வாகனப் பயணம், வாகனங்களில் அதிக அளவு ஆள்களை ஏற்றிச் செல்வது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து பொருள்களை ஏற்றி இறக்குவது உள்ளிட்ட விதிமுறை மீறல்கள் தினமும் நடந்து வருகின்றன.
தனியார் பஸ்கள்: ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு புறப்பட்டுச் செல்வதற்கு ஒன்று முதல் 3 நிமிடங்கள் மட்டுமே தனியார் பஸ்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் அதிக பயணிகளை ஏற்ற முடியாது என்பதால், வசூலைக் கருத்தில்கொண்டு அனைத்து இடைப்பட்ட நிறுத்தங்களிலும் பஸ்ûஸ நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் கால தாமதம், அரசு பஸ்களின் நேர நெருக்கடி ஆகியவற்றை அடுத்த பஸ் நிலையத்துக்குச் செல்வதற்கு முன் ஈடுகட்ட வேண்டும் என்பதால், வேகமாக வாகனத்தைச் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
புறக்கணிக்கும் அரசு பஸ்கள்: மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு புறநகர் பஸ்கள், அதிவிரைவு பேருந்து, குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் நிறுத்தப்படும் பஸ் என்ற பெயரில் இயக்கப்படுவதால், இடைப்பட்ட ஊர்களைச் சேர்ந்த பயணிகள் இட நெருக்கடி இருந்தபோதும் தனியார் பஸ்களிலேயே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதுமான எண்ணிக்கையில் அரசு நகர பஸ்கள் இயக்கப்படாததால், பள்ளி மாணவர்களும் தனியார் பஸ்களையே அதிக அளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதிகரித்துவரும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கு போக்குவரத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அரசுப் போக்குவரத்துக் கழகச் சேவையை விரிவாக்கம் செய்யவும், நெடுஞ்சாலையை விரிவுபடுத்தவும், தனியார் பஸ்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தவும், சாலைப் போக்குவரத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் பூ.முத்துவீரன் கூறியதாவது: சாலை விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து காவல் துறை, போக்குவரத்துத் துறை, அரசு போக்குவரத்துக் கழகம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...