இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் புகார் அடிப்படையில் ஐ.பி.சி. 406, 420, 465, 468 மற்றும் 471 ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய கருப்பாயூரணி போலீஸôர், தட்சிணாமூர்த்தி, சந்திரன், கதிரேசன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். டிரஸ்டி கருத்து:இதுகுறித்து புகாருக்கு உள்ளான நாச்சாரம்மன் டிரஸ்ட் நிர்வாகி தரப்பினரான தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, ""குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, அறக்கட்டளை கைங்கரியம் மற்றும் ஆவணத்தில் உள்ள சொத்துகள் சம்பந்தமாக தேவஸ்தானம் உள்ளிட்டவற்றை எதிர்த்து வழக்குகளை வாரிசுதாரர்களாகிய நாங்களே நடத்திக்கொள்ளலாம் என்றும், கைங்கரியங்கள் மற்றும் சொத்துகள் விஷயத்தில் அவற்றைக் காப்பாற்றும் பொருட்டு வாரிசுதாரர்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் ஆவணங்களில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார்.