டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப உரு மாறும் வினோத வைரஸ்கள் கொசு உற்பத்திக் கூடமாகும் அரசு குடியிருப்புகள்!

மதுரை, நவ. 1:    தமிழகம் முழுதும் இப்போது பரவிவரும் "சிக்குன் குனியா' உள்ளிட்ட காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் கிருமிகள், நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப உரு மாறுகின்றன என்பதும் அவை அரசு ஊழியர் குடியிருப்

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:10 pm

ஜெயப்பாண்டி

மதுரை, நவ. 1:    தமிழகம் முழுதும் இப்போது பரவிவரும் "சிக்குன் குனியா' உள்ளிட்ட காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் கிருமிகள், நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப உரு மாறுகின்றன என்பதும் அவை அரசு ஊழியர் குடியிருப்புகள், வீட்டுவசதி வாரிய அடுக்ககங்கள் போன்ற இடங்களில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் மூலமே உற்பத்தியாகி பரவுவவதும் தெரியவந்துள்ளது.

  "ஏடிஎஸ்' எனப்படும் ஒருவகைப் பெண் கொசுவால் பரவும் வைரஸôல் சிக்குன் குனியா ஏற்படுகிறது.

  இப்போது 7 வகைகளுக்கும் மேற்பட்ட வைரஸ் கிருமிகள் மனிதர்களைத் தாக்கி வருவதாகவும், இவை ஒவ்வொருவரது தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப தனது உருவத்தை திடீரென மாற்றிக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

  இத்தகைய திடீர் உருவ மாற்றத்தால், அது எவ்வகை நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிவதில் சிரமமும், கால தாமதமும் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

  "நோய் குணமாக முறையான சிகிச்சைகள் வேண்டும். ஆனால், மீன் போன்றவற்றை உண்டால் நோய் தீரும் என்பது தவறான சிந்தனை' என்கிறார் மதுரை அரசு மருதுவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் எஸ்.எம்.சிவகுமார்.

  12 வகை கொசுக்கள்:  மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் 12 வகைக் கொசுக்கள் இருப்பதாகப் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

  ஏடிஎஸ்  (அங்க்ங்ள்), ஏனோப்ளஸ்  (அய்ர்ல்ட்ங்ப்ங்ள்),கியூலெக்ஸ்  (இன்ப்ங்ஷ்)மற்றும் ஆர்மிஜெரிஸ்  (அழ்ம்ண்ஞ்ங்ழ்ங்ள்)ஆகிய கொசு வகைகள் இதில் சில.

  இவற்றில் ஏடிஎஸ் பெண் கொசுக்கள் மூலமே சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்டவை பரவுகின்றன.

  ஆர்மிஜெரிஸ் கொசுக்கள் மிகுந்த விஷத்தன்மை உடையவை. இவை கடித்தால் அந்த இடத்தில் தடிப்பு ஏற்படும்.  எனோப்ளஸ் வகையில் ஒன்றான க்யூலிஃபேசியஸ் வகையால்தான் 60 சதவீத மலேரியா நோய் பரவுவதாகக் கூறப்படுகிறது.  கண்மாய், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் இக் கொசுக்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்போது இவற்றால் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

  மழைக்காலம் ஆரம்பித்தாலே கொசு பெருகுவதைத் தவிர்க்க முடியாது என்றாலும், அவற்றை வீடுகளில் தங்க இடமளிக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கிறார் மதுரை மண்டல பூச்சியியல் துறை இயக்குநர் தியாகி.

  மாநிலத்தில் அரசுக் குடியிருப்புகள் மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் என சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானவற்றின் நீர்த்தேக்கத் தொட்டிகளில் மூடிகள் உடைந்தும், பாசி படர்ந்தும், திறந்த நிலையிலும் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது சுத்தப்படுத்துவதுகூட கிடையாது. எனவே அவற்றின் மூலமே காய்ச்சல் வருகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  நோய் பரவாமலிருக்க ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளுடன் வீடுகளில் உள்ள குடிநீர் சேமிப்பு தொட்டி, கழிவுநீர் வரும் பாதை போன்றவற்றைச் சுத்தமாக வைத்திருக்கும் கடமை மக்களுக்கும் இருக்கிறது. அரசு, மக்கள், சமுதாய அமைப்புகள் ஒத்துழைத்தால்தான் இந்த நோய் பரவலைக் கட்டுப்படுத்தி தடுக்க முடியும். அரசை மட்டுமே குறைகூறுவதால் யாதொரு பயனும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.