மதுரை, ஜூலை 23: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியரின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் கொண்டுவரப்பட்ட (எண்ழ்ப்ள் ஐய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்ள்) திட்டத்திற்காக வங்கியில் கணக்குத் தொடங்கி ஓராண்டாகியும் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மூலம் கடந்தாண்டு ஆதிதிராவிடர் மாணவியருக்கான கல்வி ஊக்கத் தொகை வழங்கும் புதிய திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.
இத் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடி மாணவியருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதையொட்டி, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்தாண்டு இத் திட்டத்தின்கீழ் மாணவியர்கள் ஏராளமானோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களது பெயர் அடங்கிய ரேஷன் கார்டுகளின் நகல்கள் பெறப்பட்டு, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் மூலம் அந்தந்தப் பகுதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவியர் மற்றும் அவரது பெற்றோர் பெயரில் கணக்குத் தொடங்கப்பட்டது.
மாணவிகள் என்பதால் பணம் இருப்பு வைப்பதற்கான நிபந்தனை ஏதுமின்றி இக் கணக்கு தொடங்க வங்கியினர் அனுமதித்தனர்.
தற்போது கணக்குத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டான நிலையில், சம்பந்தப்பட்ட மாணவியரின் கணக்கில் இதுவரை பணம் வந்து சேரவில்லை.
இத் திட்டத்தின்கீழ் ஊக்கத் தொகையானது மத்திய அரசின் நிதி மூலம் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டு, பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு ஈ.சி.எஸ். முறையில் நேரடியாக கணக்கில் வரவு வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால், ஓராண்டாகியும் பணம் தங்களது கணக்கில் வராததால் பெற்றோர்கள் அடிக்கடி வங்கிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு இத்திட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான மாணவியர் சேர்க்கப்பட்டு, வங்கிகளில் கணக்குத் தொடங்கப்பட்டது.
இதனிடையே, இந்த ஆண்டும் பயனாளிகளுக்கான பட்டியலைத் தயார் செய்யும்படி அந்தந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கெனவே கணக்குத் தொடங்கி ஓராண்டாகியும் பணம் பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில், தற்போது அடுத்த பட்டியலையும் தயாரித்து கணக்குத் தொடங்கச் செல்லும்போது வங்கியினர் பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக தலைமையாசிரியர்கள் வட்டாரங்கள் கவலை தெரிவித்தன.
திட்டம் தொடங்கப்பட்டு உரிய பலன் மாணவிகளுக்குச் சென்றவடைதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வருவது மாணவியரின் பெற்றோரையும் அதிருப்தியுறச் செய்துவருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது இத் திட்டத்தின்கீழ் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குப் பணத்தை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் மாணவிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

