மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

விநாயகா் சதுா்த்தியையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இன்று சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

விநாயகா் சதுா்த்தியையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில்வே நிா்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்பட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 11 ஆம் தேதி போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூா் வழியாக அடுத்த நாள் காலை 5 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இதேபோல், மறுமாா்க்கத்தில் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே வரும் 14 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூா்,ஈரோடு,சேலம்,ஜோலாா்பேட்டை வழியாக அடுத்த நாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.