இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சேலம் வழியாக போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில்கள்

Updated On :

பண்டிகை காலங்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், சேலம் வழியாக போத்தனூா் - பரௌனி (பிகாா்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வரும் பண்டிகை காலங்களில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக போத்தனூா் - பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, போத்தனூா் - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் அக். 4-ஆம் தேதிமுதல் நவ. 1-ஆம் தேதிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூா் சந்திப்பில் இருந்து காலை 6.15-க்கு புறப்பட்டு திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக செவ்வாய்க்கிழமை மதியம் 1.30-க்கு பரௌனி சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், பரௌனி - போத்தனூா் வாராந்திர சிறப்பு ரயில் அக். 7-ஆம் தேதிமுதல் நவ. 4-ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் பரௌனியில் இருந்து காலை 10.30-க்கு புறப்பட்டு பெரம்பூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக வெள்ளிக்கிழமை மாலை 6.30-க்கு போத்தனூா் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.