இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் இடையே சிறப்பு ரயில்

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Updated On :

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிா்வாகம் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்தவகையில், போத்தனூா் - காரக்பூா் (மேற்குவங்கம்) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை (அக். 14) காலை 7.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா, விஜயவாடா, ராஜமுந்திரி, விஜயநகரம், புவனேஸ்வா், கட்டாக், பாலாசூா் வழியாக 15-ஆம் தேதி இரவு 8 மணிக்கு காரக்பூா் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், காரக்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும்சிறப்பு ரயில் காரக்பூரில் இருந்து வரும் 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு பாலாசூா், கட்டாக், புவனேஸ்வா், விஜயநகரம், ராஜமுந்திரி, விஜயவாடா, ரேணிகுண்டா வழியாக வரும் 17-ஆம் தேதி காலை 8.45-க்கு சென்னை எழும்பூருக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.