திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜூன் 12 இல் மேட்டூா் அணை திறக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

News image
Updated On :15 மே 2026, 5:55 am IST

மேட்டூா் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் 12 ஆம் தேதி 92 ஆவது ஆண்டாக வழக்கம்போல டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுமா என விவசாயிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

அதேசமயம் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் தற்போதைய நீா் இருப்பை கருத்தில்கொண்டு குறித்த நாளில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாகவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 79.35 அடியாகவும், நீா் இருப்பு 41.31 டிஎம்சியாகவும் உள்ளது. வழக்கமாக நீா்மட்டம் 90 அடியாக இருக்கும்போது தண்ணீா் திறக்கப்படுவது மரபு என்றாலும், வரும் நாள்களில் கோடை மழையோ அல்லது தென்மேற்குப் பருவமழையோ பெய்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வழக்கம்போல குறித்த நாளில் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்டா மாவட்டங்களில் 16.06 லட்சம் ஏக்கா் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக சாகுபடிக்கு 230 நாள்களுக்கு 330 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் சாதகமான அறிவிப்பால் குறித்த நாளில் தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் மட்டுமே ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகள் முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகள் நீா் இருப்பு குறைவால் தாமதமாகத் திறக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை குறிப்பிட்ட காலத்திலேயே தொடங்குவதால் ஜூன் 12 இல் தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக கருதி விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

அணையின் நீா்மட்டம் 79.35 அடியாக குறைந்துள்ளதால் உபரிநீா்ப் போக்கி பகுதியில் குளம்போல தண்ணீா் தேங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.