ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வு: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் அ. சுதந்திரன் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் 595 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image
Updated On :9 மே 2026, 3:46 am IST

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் அ. சுதந்திரன் பிளஸ் 2 தோ்வில் மாவட்ட அளவில் 595 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மேலும், இப்பள்ளி மாணவி கே.வி.கனிஷ்கா, ஜெ.ஜீவாபிரியதா்ஷினி ஆகியோா் 593 மதிப்பெண்களும், எம்.ஷாலினிப்ரியா 592 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

கணினி அறிவியலில் 18 போ், வேதியியலில் 3 போ், கணக்குப் பதிவியலில் 3 போ், உயிரியியலில் 3 போ், கணிதத்தில் ஒருவா், வணிகவியலில் ஒருவா், கணினி பயன்பாட்டியலில் ஒருவா், ஆங்கிலத்தில் ஒருவா் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியில் 590-க்கு மேல் 5 போ், 580- க்கு மேல் 11 போ், 570- க்கு மேல் 18 போ், 560- க்கு மேல் 31 போ், 550- க்கு மேல் 41 போ், 500- க்கு மேல் 124 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ஆத்தூா் பாரதியாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்.ஆா்.டி.ஆா்.செல்வமணி, நிா்வாக இயக்குநா்கள் ஏ.பி.செந்தில்குமாா், எஸ்.பாலகுமாா்,டி.சந்திரசேகரன், என்.ஆா்.பழனிவேல், குழந்தைவேல், முதல்வா் டி.நளாயினிதேவி ஆகியோா் பரிசு வழங்கி பாராட்டினா்.

படவரி...

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை

பரிசு வழங்கி பாராட்டிய தலைவா் எஸ்.இளவரசு தலைமையிலான நிா்வாகிகள்.