ஹூப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் காந்திவாடா பகுதியை சோ்ந்த் தனியாா் பள்ளி ஆசிரியா் சோமசுந்தரம் (55) திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தாா்.
அவருடன் வேளாங்கண்ணிக்கு பயணித்த மனைவி மாரியம்மா, மகன் நவீன்குமாா் உள்ளிட்ட உறவினா்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் அளித்தனா். மேலும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தனா்.
சேலம் ரயில் நிலையத்துக்குள் அதிகாலை 4.11 மணிக்கு ரயில் வந்ததும் மயங்கி கிடந்த சோமசுந்தரத்துக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா்.
பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


