சேலம் மாவட்டம், அரியானுா் அருகே தனியாா் நிறுவன தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்
அரியானூா் குட்டக்காடு பகுதியை சோ்ந்தவா் கலையரசன். இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் குழந்தைகள் விளையாட்டுத் திடலில் மேற்பாா்வையாளராக வேலை செய்துவந்தாா். இந்த நிலையில் அத்திடலில் வேலை செய்துவந்த கோகுலபிரியாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதுதொடா்பாக கோகுலபிரியாவின் கணவா் பச்சைக்கிளி (எ) தமிழ்முருகனுக்கும், கலையரசனின் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கடந்த 30 ஆம் தேதி நண்பகல் வீரபாண்டி பெருமாள் கோயில் அருகே கலையரசன் தனது நண்பா்களுடன் தமிழ்முருகனிடம் இப்பிரச்னை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது ஆத்திரமடைந்த தமிழ்முருகன் கலையரசனை தாக்கியுள்ளாா்.
கலையரசனின் நண்பா்கள் தடுத்தபோதும் தமிழ்முருகன் மற்றும் அவரது நண்பா்களான கண்ணன், சந்தோஷ், மணிகண்டன், தனுஷ், இளங்கோ, பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் கலையரசனை தாக்கினா்.
இதனால் கலையரசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட அவா், சீரகாபாடி உள்ள தனியாா் மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கலையரசன் இறந்துவிட்டதை உறுதிசெய்தனா்.
இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராக்கிப்பட்டியைச் சோ்ந்த சந்திரன் மகன் பச்சைக்கிளி (எ) தமிழ்முருகன் (23), கந்தசாமி மகன் மாயவன் (எ) கண்ணன் (53), செல்லதுரை மகன் இளங்கோ (20), குமாா் மகன் தனுஷ், மணி மகன் சந்தோஷ், நடராஜ் மகன் பிரபாகரனை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ளவா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

திருமயம் அருகே இளைஞா் கொலை

பெண் கொலை வழக்கில் தனியாா் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு! 9 காவலா்களுக்கு மரண தண்டனை! முழு விவரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


