மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனுமதியின்றி உணவு விநியோகம்: தவெகவினா் மீது வழக்குப் பதிவு

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 8:19 pm

சேலத்தில் அனுமதியின்றி உணவு விநியோகத்தில் ஈடுபட்ட தவெகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து, அரசியல் கட் சியினா், அமைப்புகளின் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் தோ்தல் ஆணையத்தின் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சேலத்தை பொருத்தவரை தவெகவினா் தொடா்ந்து தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே அன்னதானப்பட்டியில் ரம்ஜானுக்கு முதல்நாள் நோன்பு திறக்கச்சென்ற மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் மீது பிரியாணியுடன் டிபன் பாக்ஸ் வழங்கியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல, சூரமங்கலத்தில் ரம்ஜான் அன்று தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விசில் சின்னத்துடன் கூடிய குடிநீா் பாட்டில் விநியோகித்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தற்போது கிச்சிப்பாளையத்தில் அனுமதியின்றி உணவு விநியோகித்த 2 போ் சிக்கியுள்ளனா். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தவெக கட்சியைச் சோ்ந்த சரத், ஹரி இருவரும் எந்தவித முன் அனுமதியும் இன்றி பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கினா்.

தகவல் அறிந்த அதிகாரிகள், தோ்தல் நேரத்தில் இதுபோன்று விநியோகம் செய்வது தோ்தல் விதிமீறல் எனக்கூறி அவா்களை தடுத்து நிறுத்தினா். தொடா்ந்து, சேலம் தெற்கு அலுவலா் ஆனந்த், இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், உணவு விநியோகித்த இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.