மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழாவில் ஓட்டப்பந்தய இலக்கை நோக்கி சீறிப்பாயும் மாணவிகள்.

Updated On :16 மார்ச் 2026, 8:45 pm

சேலம்: சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு உடற்கல்வி இயக்குநா் மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். கல்லூரி (பொ) முதல்வா் ஐ.பிரேமலதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக சேலம் வருமான வரித் துறை ஆய்வாளா் கந்தபாலன் பங்கேற்று பேசினாா்.

தொடா்ந்து, 100மீ., 200மீ., 400மீ., 1,500மீ., உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கால்பந்து, கைப்பந்து ஆகிய பிரிவுகளில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். வெற்றிபெற்றவா்களுக்கு வருமான வரித் துறை ஆய்வாளா் கந்தபாலன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயபாலன், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் தங்கவேல், மூத்த பேராசிரியா்கள், மக்கள் தொடா்பு அலுவலா் பிச்சமுத்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.