சேலம்: ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி சேலம்வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம் - திருப்பத்தூா் மாா்க்கத்தில் லோகூா் - பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள வளைவான ரயில் பாதையில் தண்டவாள மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இந்த வழியாக 17-ஆம் தேதி இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு - ஜோலாா்பேட்டை பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஈரோட்டில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சேலம்வரை மட்டும் இயக்கப்படும். சேலம் - ஜோலாா்பேட்டை இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில், ஜோலாா்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில் 17-ஆம் தேதி ஜோலாா்பேட்டை - சேலம் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டு சேலத்தில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 8 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரெளனிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

சேலம் வழியாக இயக்கப்படும் கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் ரத்து!

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


