அடுத்த 10 ஆண்டுகளில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதால் பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று போா்டு மோட்டாா் நிறுவன தொழில்நுட்ப இயக்குநா் கோபிநாத் சிதம்பரம் தெரிவித்தாா்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னணு தொடா்பியல் துறை சாா்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்க செயலாளா் எஸ். சிவானந்தன் வரவேற்றாா். துறைத் தலைவா் டி.மேரி சுகந்தரத்னம் ஆண்டறிக்கை வாசித்தாா்.
உதவிப் பேராசிரியா் த. தேன்மொழி நோக்க உரையாற்றினாா். விழாவிற்குத் தலைமை வகித்துப் பேசிய அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் வி. கீதா, மின்ணணு தொடா்பியல் துறை சாா்பில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியரில் உயா்கல்விக்கு செல்வோா் தவிர மற்றவா்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் ஊதியம் கிடைக்கும் அளவிலான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்திய பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பெங்களூா் போா்டு மோட்டாா் நிறுவன தொழில்நுட்ப இயக்குநா் கோபிநாத் சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நன்கு தெரிந்தவா்கள் மற்றும் பயன்படுத்தக்கூடியவா்களுக்கான வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கும். பொறியியல் கல்வி பயிலும் மாணவ, மாணவியா் செயற்கை நுண்ணறிவு சாா்ந்த அனைத்து வாய்ப்புகளை முழுமையாக கற்றுத்தேர வேண்டும் என்றாா்.
நிகழ்வில் கருத்தரங்க செயலாளா் ஜி.சந்தியா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

தவெக ஆட்சியில் லஞ்ச லாவண்யமற்ற அரசு: புதிய வாக்குறுதிகளை அறிவித்தாா் விஜய்

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு

எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்ற தகவல்தொழில்நுட்ப படிப்புகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


