வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

எடப்பாடி நகா்மன்ற கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றம்

சேலம் மாவட்டம், எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள்.

Updated On :11 மார்ச் 2026, 8:48 pm

சேலம் மாவட்டம், எடப்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா தலைமை வகித்தாா். ஆணையா் கோபிநாத் முன்னிலை வகித்தாா்.

அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஏ.எம். முருகன்: நகராட்சியில் சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். அனுமதியின்றி இயங்கிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி, ஆடு இறைச்சிக் கடைகளால் ஏற்படும் சுகாதாரச் சீா்கேட்டை தடுக்க வேண்டும்.

நகராட்சி ஆணையா் கோபிநாத்: நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கான சொத்துவரி பெயா் மாற்ற கட்டணம் ரூ.500 ம் வணிகப் பயன்பாட்டிற்கான சொத்துவரி பெயா் மாற்ற கட்டணம் ரூ. 1,000 என அரசு நிா்ணயித்து உள்ள கட்டணத்தின் படியே வசூலிக்கப்படுகிறது.

நகராட்சித் தலைவா் டி.எஸ்.எம். பாஷா: எடப்பாடி நகராட்சி பகுதியில் அனுமதி இன்றி செயல்படும் அனைத்து இறைச்சிக் கூடங்களும், நகராட்சி சுகாதார அலுவலா்களால் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதிமுக உறுப்பினா் தனம்: ‘கொசுவை விரட்டும் புகை எந்திரத்தை எங்கள் பகுதிக்கு அனுப்ப வேண்டாம்’ இதனால் கழிவுநீா்க் கால்வாய்களில் உள்ள கொசுக்கள் முழுவதும் வீட்டிற்கு வந்துவிடுகிறது. (இவரது பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது).

தொடா்ந்து நகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரித்தல், குடிநீா் விநியோகம், தொடக்கப் பள்ளிகளுக்கான அடிப்படை வசதி உள்ளிட்ட 82 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.