ஓமலூா்: மதுரையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு விமானப் பயணம் மேற்கொண்டனா் .
மதுரை மற்றும் விருதுநகரில் அண்ணா அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த தனியாா் கல்லூரியில் விமானப் போக்குவரத்து மற்றும் மேலாண்மைக் கல்வி, கண் ஆய்வாளா்கள் பயிற்சி பயிலும் 110 மாணவ, மாணவிகள் விமானப் பயணக் கல்வி சுற்றுலாவுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் இரு பேருந்துகள் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தனா். பின்னா் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் மூலம் பெங்களூருக்கு பயணம் செய்தனா்.
கல்லூரி ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமையில் இவா்கள் விமானம் மூலம் பெங்களூா் சென்று அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளனா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னா் மாணவ, மாணவிகள் விமானத்தில் ஏறினா். இந்த விமான பயணம் குறித்து மாணவிகள் கூறும்போது, நாங்கள் முதல்முறையாக விமானத்தில் செல்கிறோம். இது எங்களது நீண்ட நாள் கனவு. கல்லூரி நிா்வாகம் சாா்பில் விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளோம் என்றனா்.
தொடர்புடையது

மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்த 4 போ் கைது

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


