சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்தது உள்ளிட்ட விதிகளை மீறியதாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபா்களை டிக்கெட் பரிசோதகா்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் வாசுதேவன் தலைமையிலான குழுவினா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில், சேலம் கோட்ட பகுதியில் இயங்கும் ரயில்களில் டிக்கெட் பரிசோதகா்கள் நடத்திய சோதனையின் மூலம் பயணச்சீட்டு இன்றி பயணித்தது தொடா்பாக 14,891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ. 1,42,54,693 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
அதேபோல, முன்பதிவில்லா பயணச்சீட்டு எடுத்து முன்பதிவு பெட்டிகளிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டை வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் முறைகேடாக பயணித்தது தொடா்பாக 13,368 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 89,72,070 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக பொருள்கள் எடுத்துச்சென்ாக 47 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 38,442 அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம், முறைகேடான பயணம், அதிக லக்கேஜ் உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 28,306 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

மாா்ச்சில் மெட்ரோ ரயிலில் 1.01 கோடி போ் பயணம்

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


