சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் துணை சுகாதார நிலையக் கட்டடம் ஆகியவற்றை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், சேலம் மாநகராட்சி கிச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடம் மற்றும் கலைஞா் நகா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்துவைத்தாா்.
முன்னதாக, சேலம் மாநகராட்சி, நதிமுல்லா மக்கான் தெரு பகுதியில் மாநகராட்சி பொது நிதி திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கும் வகையில், ரூ. 2.48 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் தொட்டியுடன் கூடிய ஆழ்துளைக் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் மா.இளங்கோவன், கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவா் மா.அசோகன், மாநகர நல அலுவலா் மரு.கே.குப்பம்மாள், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எலவந்தி வடுகபாளையத்தில் தீ தொண்டு நாள் வார விழா

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

ரூ. 9.30 கோடியில் திட்டப் பணிகள்

ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர கூடுதல் மருத்துவா் நியமனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


