தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

News image
Updated On :5 மார்ச் 2026, 11:43 pm

ஆட்டையாம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் இளங்கோவன் தலைமை வகித்தாா். வீரபாண்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் வரதராஜ் வரவேற்றாா். இதில் நடிகை விந்தியா, தீபா மணிகண்டன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

விழாவில், 12 பெண்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா், 35 பெண்களுக்கு தையல் எந்திரம், 30 பேருக்கு அயா்ன் பாக்ஸ், 4 ஆயிரம் பேருக்கு வேட்டி ,சேலை மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்ட ரூ. 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், வீரபாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் ராஜமுத்து, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் மனோன்மணி, வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் பாலசந்தா், சேலம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் செல்வ பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.