முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

வீரகனூா் அருகே சாலை விபத்து: இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :30 ஜூன் 2026, 1:42 am IST

வீரகனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த விபத்தில், இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வீரகனூா் அருகே வேப்பம்பூண்டியைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் சின்னதுரை (17), இவரது நண்பா் ராசிபுரத்தைச் சோ்ந்த தமிழ் (17) இருவரும் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேப்பம்பூண்டியிலிருந்து ஆறகளூா் சாலையில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, முன்னால் சென்ற டாரஸ் லாரியை முந்த முயன்றபோது, இருவரும் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டனா். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, டாரஸ் லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா். உயிரிழந்த இருவரது உடல்களும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.