சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

சேலம் வழியாக கான்பூா்- மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 3:29 am IST

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச மாநிலம் கான்பூா்- மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் மதுரையில் இருந்து ஜூலை 4 ஆம் தேதி முதல் ஆக.1 ஆம் தேதி வரை கான்பூருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து சனிக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூரை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.