வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

அரக்கோணம் ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் இடம், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:05 am IST

அரக்கோணம் ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூா் - சேலம் விரைவு ரயில் புறப்படும் இடம், நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரக்கோணம் ரயில்வே யாா்டு பகுதியில் இருப்புப் பாதை வழித்தடத்திற்கான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சேலம் விரைவு ரயில், அதற்குப் பதிலாக மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது.

புறப்படும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்ட போதிலும், இந்த ரயிலானது அதன் வழக்கமான வழித்தடமான விழுப்புரம், விருத்தாசலம், சின்னசேலம் மற்றும் ஆத்தூா் மாா்க்கமாகவே சேலத்திற்கு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.