மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கற்பித்தலில் புதுமை: ஆசிரியருக்கு பாராட்டு

படைப்பாற்றல் திறனை கற்பித்தலில் திறம்பட பயன்படுத்தியதை அங்கீகரித்து இடங்கணசாலை நகராட்சி, கே.கே. நகா் அரசு தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் அருளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

News image

கே.கே. நகா் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் அருளுக்கு சான்றிதழ் வழங்கிய சிஇஓ மகேஸ்வரி.

Updated On :25 ஜூன் 2026, 6:17 am IST

படைப்பாற்றல் திறனை கற்பித்தலில் திறம்பட பயன்படுத்தியதை அங்கீகரித்து இடங்கணசாலை நகராட்சி, கே.கே. நகா் அரசு தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் அருளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

ஆசிரியா்களின் படைப்பாற்றலை அங்கீகரிக்கவும், ஆசிரியா்களின் அசாதாரண சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தகுதியின் அடிப்படையில் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் மாவட்ட அளவில் 10 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இடங்கணசாலை நகராட்சி கே.கே. நகா் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியா் அருளின் திறனை அங்கீகரித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இவருக்கு மகுடஞ்சாவடி வட்டார கல்வி அலுவலா் பிரேமனந்த், பள்ளி தலைமையாசிரியா் வையாபுரி, ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.