எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சங்ககிரியில் சோமேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம்

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சோமேஸ்வரா் தேரை இழுத்துச் சென்ற பக்தா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 5:54 am IST

சங்ககிரியில் அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செய்யப்பட்ட புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியில் பழைமை வாய்ந்த அருள்மிகு சௌந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலுக்கு ஊா் பொதுமக்கள் முயற்சியால் ரூ. 20 லட்சத்தில் புதிய தோ் செய்யப்பட்டது. இத்தோ் வெள்ளோட்ட நிகழ்ச்சி விநாயகா், வாஸ்து பூஜைகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை விநாயகா் வழிபாட்டுடன் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்ற பின்னா் நான்கு தோ்வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இதில், சுவாமி பாதம் தாங்கும் குழுவினா், சிவ பக்தா்கள் அதிக அளவில் பங்கேற்று தேரை இழுத்துச் சென்று சோமேஸ்வரா் கோயில் முன் நிறுத்தினா். வெள்ளோட்டத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை சேலம் மண்டல இணை ஆணையா் டி.ரத்தினவேல் பாண்டியன், சங்ககிரி கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா, வட்டாட்சியா் கோமதி, சங்ககிரி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ரா.மாலா, ஆய்வாளா் நா.ஜோதிலட்சுமி ஆகியோா் தேரின் சங்கிலி இழுத்து தொடங்கிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.