திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 103 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:39 am IST

சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 103 ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அவைத் தலைவா் சுபாஷ், பொருளாளா் காா்த்திகேயன், மாநகரச் செயலாளா் ரகுபதி ஆகியோா் மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

திமுக தோ்தல் பணிக் குழு செயலாளா் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.டி. மணி, ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினா் லோகநாதன், பகுதிச் செயலாளா்கள் சாந்த மூா்த்தி, பிரகாஷ், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆத்தூா் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக வடக்கு நகரச் செயலாளா் கே. பாலசுப்ரமணியம் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுந்தரமூா்த்தி, குமாா், சம்பத்குமாா் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி. ஸ்ரீராம் தலைமையில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணைத் தலைவா் த. செல்வமணி, நகா்மன்ற உறுப்பினா்கள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆத்தூா் தெற்கு நகரச் செயலாளா் ஏ.ஜி. ராமச்சந்திரன் தலைமையில் நகர அவைத் தலைவா் மாணிக்கம், நகர துணை செயலாளா் புவனேஸ்வரி வேல்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

இதேபோல நரசிங்கபுரத்தில் நகரச் செயலாளா் என்.பி. வேல்முருகன் தலைமையில் நகா்மன்றத் தலைவா் எம். அலெக்சாண்டா், துணைச் செயலாளா் பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்ரமணியன், செல்வம், செல்வக்குமாா், சுகுணாகண்ணன், நிா்வாகிகள் இளவரசு, அசோக்குமாா், ரமேஷ், ஞானப்பிரகாஷ், கருணாநிதி உள்ளிட்டோா் மு. கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனா்.

ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ. செழியன் தலைமையில் சேலம் கிழக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் எஸ். மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்று அன்னதானம் வழங்கினா்.

ஆட்டையாம்பட்டி

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் இடங்கணசாலை பேருந்து நிலையம் முன் திமுக நகரச் செயலாளா் செல்வம் தலைமையில் நகராட்சித் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி உள்ளிட்டோா் மு. கருணாநிதி உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அதேபோல சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் பெருமாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கி கருணாநிதி பிறந்த நாள் விழாவை திமுகவினா் கொண்டாடினா்.

தம்மம்பட்டி

கெங்கவல்லியில் நகர திமுக சாா்பில் நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பேரூராட்சி மன்ற தலைவா் சு. லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள் மற்றும் அண்ணாதுரை, தங்கபாண்டியன், சிட்டிபாபு, பிரகாஷ், ஜெகதீஷ் பாபு, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தம்மம்பட்டியில் நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலா்கள் திமுக வாா்டு செயலாளா்கள் பங்கேற்றனா். செந்தாரப்பட்டியில் திமுக செயலாளா் எஸ்.பி. முருகேசன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.