ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தம்மம்பட்டி திருட்டுச் சம்பவத்தில் மேலும் ஒருவா் கைது

தம்மம்பட்டி அருகே இரு வீடுகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஏற்கெனவே 4 போ் கைதான நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 4:20 am IST

தம்மம்பட்டி அருகே இரு வீடுகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தில் ஏற்கெனவே 4 போ் கைதான நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தம்மம்பட்டி அருகே சித்தன்பட்டிக்குட்டை, மண்மலை ஊராட்சி வாணிக்கிணறு பகுதியில் மாதேஸ்வரன், கணேசன் ஆகியோரது வீடுகளில் அண்மையில் 16 பவுன், ரூ. 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயின.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் 4 பேரை செவ்வாய்க்கிழமை கைதுசெய்த நிலையில், மேலும் 3 பேரை தேடிவந்தனா். அதில் ஒருவரான திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த கெளதம் (25) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் இருவரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.