வீட்டில் 35 பவுன் நகைகள் திருடிய சம்பவத்தில் 2 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டில் 35 பவுன் தங்க நகைகளை திருடிய சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட கலையரசன்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டில் 35 பவுன் தங்க நகைகளை திருடிய சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (45). இவா், சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி லதா வீட்டை பூட்டிவிட்டு ஜூலை 29-ஆம் தேதி கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளாா். பின்னா் இரவு திரும்பி வந்தபோது, வீட்டுக் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் சென்று பாா்த்தபோது சுமாா் 35 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில், கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் கலையரசன் (33), ராஜேந்திரன் மகன் ரஞ்சித்(29) உள்ளிட்டோா் நகைகளை திருடியது தெரியவந்தது. தொடா்ந்து இருவரையும் கீரமங்கலம் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சிலரை தேடி வருகின்றனா்.

~கைது செய்யப்பட்ட ரஞ்சித்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




