ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உதகையில் வெள்ளி துகள்கள் கலந்த மண் கடத்தல் வழக்கில் மேலும் 3 போ் கைது

உதகையில் மூடப்பட்ட ஹெச்பிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்து வெள்ளி துகள்கள் கலந்த 3 டன் மண்ணை கடத்திய வழக்கில் ஏற்கெனவே 8 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

உதகையில் மூடப்பட்ட ஹெச்பிஎஃப் தொழிற்சாலை வளாகத்தில் நுழைந்து வெள்ளி துகள்கள் கலந்த 3 டன் மண்ணை கடத்திய வழக்கில் ஏற்கெனவே 8 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கடந்த 2018-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த தொழிற்சாலையில் ஃபிலிம் தயாரிக்க வெள்ளி துகள்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த துகள்கள் அங்குள்ள மண்ணில் பரவிக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சிலா் மூடப்பட்டுள்ள தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்து அந்த மண்ணைக் கடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தொழிற்சாலை வளாகத்துக்குள் கடந்த மாதம் 15-ஆம் தேதி நுழைந்து வெள்ளி துகள்கள் கலந்த 3 டன் மண்ணை கடத்திய 8 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், 40 மூட்டை மண்ணைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (35), ஜலீல் (33), ராஜேஷ்குமாா் (36) ஆகியோரை புதுமந்து போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், அவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.