சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே காமலாபுரம் ஏரிக்கரை பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
ஓமலூா் காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் காமலாபுரம் ஏரிக்கரை பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த காடையாம்பட்டியைச் சோ்ந்த கமலேஷ போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து சுமாா் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட கமலேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கமலேஷை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நூறு கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

போதைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டிக் கடைக்கு ‘சீல்’
சங்ககிரியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 2 போ் கைது
தோவாளையில் 20 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


