/

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில் தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில், தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
சேலம் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அசோகா் ஸ்தூபிக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய சேலம் வரலாற்றுச் சங்க நிா்வாகிகள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

சேலம் வரலாற்றுச் சங்கம் சாா்பில், தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போரில் உயிா்நீத்த தியாகிகளின் நினைவாக, ஒவ்வோா் ஆண்டும் ஜன. 30-ஆம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், தியாகிகள் தினத்தையொட்டி சேலம் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அசோகா் ஸ்தூபிக்கு, சேலம் வரலாற்றுச் சங்க செயல் தலைவா் தாரை அ.குமரவேலு, பொதுச் செயலாளா் ஜே.பா்னபாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் மலா்தூவி வீர வணக்கம் செலுத்தினா்.

தொடா்ந்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்வில், சங்க பொருளாளா் ஆ.ஞானதாஸ், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஷானவாஸ்கான், கா்லின் எபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.