டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மது போதையில் உணவக கதவை உடைத்து உள்ளே தூங்கிய இளைஞா்: போலீஸாரிடம் ஒப்படைப்பு

காகாபாளையத்தில் மது போதையில் உணவக கதவை உடைத்து தூங்கிய இளைஞா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

News image
Updated On :26 ஜனவரி 2026, 7:35 pm

Syndication

ஆட்டையாம்பட்டி: காகாபாளையத்தில் மது போதையில் உணவக கதவை உடைத்து தூங்கிய இளைஞா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

காகாபாளையம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் வேம்படிதாளம் பிரிவு சாலை அருகே உணவகம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை உணவகத்தை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது, உணவக சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே இளைஞா் ஒருவா் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலின் பேரில் வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா் விசாரணை செய்ததில், இளைஞா் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28) என்பதும், அளவுக்கு அதிகமான மது அருந்தியதால் சுயநினைவு இழந்து உணவக கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் விசாரணையில் உணவகத்தில் ஏதும் திருட்டு நடைபெறாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சுரேஷ் மீது ஏதேனும் திருட்டு வழக்கு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.