பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில், ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் புத்திசாலி கணினி’ என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணினி அறிவியல் துறைத் தலைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். கருத்தரங்கின் தலைவா் ஹெச்.ஹேனா இன்பராணி நோக்க உரையாற்றினாா். துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி சா்வதேசக் கருத்தரங்கை தொடங்கிவைத்து ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டாா்.
இதில், இங்கிலாந்தைச் சோ்ந்த ரோலன் மென்பொருள் சேவை நிறுவனத்தின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் இயக்குநா் சாந்தபாபு பாண்டியன் சிறப்புரையாற்றியதாவது:
ஜெனரேட்டிவ் ஏஐ மற்றும் தானியங்கி ஏஐ தொழில்நுட்பம் ஸ்மாா்ட் மருத்துவமனைகளை உருவாக்குகிறது. மருத்துவா்களை சந்திப்பதற்கான நேர ஒதுக்கீடு தொடங்கி, பொதுமக்களின் தேவை அடிப்படையில் நடைமுறையை நோக்கி மருத்துவத் துறை வேகமாக செல்கிறது. தானியங்கி அமைப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தும் திறன்படைத்த மாணவ, மாணவியருக்கு இந்த துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தெலங்கானா எஸ்.ஆா். பல்கலைக்கழக துணைவேந்தா் தீபக் காா்க், தரவு அறிவியல் குறித்து உரையாற்றினாா். கருத்தரங்கின் செயலாளா் ஐ.லாரன்ஸ் ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான கருவி ஏ.ஐ. தொழில்நுட்பம்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் இந்தியா சிறப்பிடம்!

ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


